Home » செய்திகள் » வந்தாச்சு மனித வாஷிங் மெஷின் – இனி குளிக்க கூட வேணாம் போலயே – ஜப்பான் நிறுவனம் அறிமுகம்!

வந்தாச்சு மனித வாஷிங் மெஷின் – இனி குளிக்க கூட வேணாம் போலயே – ஜப்பான் நிறுவனம் அறிமுகம்!

வந்தாச்சு மனித வாஷிங் மெஷின் - இனி குளிக்க கூட வேணாம் போலயே - ஜப்பான் நிறுவனம் அறிமுகம்!

ஜப்பான் நிறுவனம் தற்போது மனிதர்களை குளிக்க வைக்கும் விதமாக மனித வாஷிங் மெஷின் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உலகம் என்னைக்கு டிஜிட்டல் யுகத்திற்கு மாறி வந்ததோ அன்றில் இருந்தே டெக்னாலஜி வளர்ந்து வருகிறது. நமக்கெல்லாம் துணிகளை துவைக்கும் வாஷிங் மெஷின் பற்றி தான் தெரியும். ஆனால் இப்பொழுது முதல் முறையாக மனிதர்களை குளிப்பாட்டும் வாஷிங் மெஷினை தற்போது ஜப்பான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த மிஷன் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த மிஷினுக்குள் ஒரு மனிதன் ஏறி படுத்து கொண்ட பிறகு, பாதி அளவுக்கு இதமான நீர் நிரப்பப்படும். பின்னர் சிறு குமிழ்களுடன் சுற்றியும் வேகமாக நீர் பாய்ச்சி அடிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அந்த சிறு குமிழ்கள் உடையும் பொழுது ஏற்படும்  அழுத்தத்தினால் தான் மனிதனின் உடலில் இருக்கும் அழுக்குகள் சுத்தமாகும் என்றும் ஜப்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 15 நிமிஷத்துல இந்த மெஷின் ஒரு மனிதனை குளிப்பாட்டி காய வைக்கும் தன்மை உடையது என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மனித வாஷிங் மெஷின் இன்னும் சில நாட்களில் பொதுமக்கள் மத்தியில் கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதன் முதற்கட்ட சோதனையாக ஆயிரம் பேரை குளிக்க வைத்து காண்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கண்காட்சிகள் அறிமுகம் செய்யப்படும் போது அதன் விலை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த எலிஸ் பெர்ரி – இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!

டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது –  சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் – டிசம்பர் 21 தான் கடைசி – காலக்கெடு கொடுத்த TNPSC!!

ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் – விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி முடிவு!

2027ல் செயல்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – வெளியான முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் நாளை (10.12.2024) மின்தடை! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top