தற்போது ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுளளார். தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் டிசம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தற்போது புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ரிசர்வ் வங்கி:
தற்போது ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது பதவிக்காலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு பதிலாக நியமிக்கப்படுகிறார்.
அந்த வகையில் தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் டிசம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டில் நிதிச் சேவைத் துறையின் செயலாளரான சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பரிந்துரைத்தது.
வந்தாச்சு மனித வாஷிங் மெஷின் – இனி குளிக்க கூட வேணாம் போலயே – ஜப்பான் நிறுவனம் அறிமுகம்!
புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா:
இதனை தொடர்ந்து சஞ்சய் மல்ஹோத்ரா ராஜஸ்தான் கேடரின் 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மேலும் அவர் REC லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு அவர் எரிசக்தி அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றியுள்ளர். மேலும் சஞ்சய் மல்ஹோத்ரா ஐஐடி கான்பூரில் பொறியியல் பட்டம் பெற்றவர்.
இதனையடுத்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். மேலும் கடந்த 30 ஆண்டுகளாக மின்சாரம், நிதி, வரிவிதிப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் போன்ற துறைகளில் அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்:
டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த எலிஸ் பெர்ரி – இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!
குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் – டிசம்பர் 21 தான் கடைசி – காலக்கெடு கொடுத்த TNPSC!!
2027ல் செயல்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – வெளியான முக்கிய தகவல்!
ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் – விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி முடிவு!