Home » சினிமா » ஹாலிவுட்டில் தனுஷுடன் நடிக்கும் சிட்னி ஸ்வீனி – அச்சச்சோ அவர் டிரெஸ்ஸே போடமாட்டாரே?

ஹாலிவுட்டில் தனுஷுடன் நடிக்கும் சிட்னி ஸ்வீனி – அச்சச்சோ அவர் டிரெஸ்ஸே போடமாட்டாரே?

ஹாலிவுட்டில் தனுஷுடன் நடிக்கும் சிட்னி ஸ்வீனி - அச்சச்சோ அவர் டிரெஸ்ஸே போடமாட்டாரே?

பிரபல நடிகரான தனுஷுடன் சேர்ந்து ஹாலிவுட்டில் நடிகையான Sydney Sweeney (சிட்னி ஸ்வீனி) நடிக்கும் புதிய படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இவர், குபேரா மற்றும் இட்லி கடை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இட்லி கடை படத்தை அவர் இயக்குவதோடு மட்டுமின்றி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இது தவிர இன்னும் ஒரு சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார். மேலும் கோலிவுட், பாலிவுட் தாண்டி அவர் ஹாலிவுட்டிலும் பிரபல நடிகராக இருந்து வருகிறார். அதன்படி, தனுஷ்  ஏற்கனவே பிரெஞ்சு படமான “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்” என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, ஹாலிவுட் அவெஞ்சர்ஸ் இயக்குநர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவான “தி கிரே மேன்” படத்தில் ரியான் காஸ்லிங் மற்றும் கிறிஸ் எவான்ஸ் உடன் சேர்ந்து நடித்து இருந்தார்.

இப்படி இருக்கையில் தனுஷ் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறாராம். அதாவது, நடிகர் தனுஷ் லீடு ரோலில் நடிக்க போகும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் படம் உருவாகப் போவதாக தாறுமாறு தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவருக்கு ஜோடியாக ஒரு யங் ஹீரோயின் நடிக்க இருக்கிறாராம். அது வேற யாரும் இல்லை, பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி தான் நடிக்க இருக்கிறாராம். 27 வயதாகும் சிட்னி ஸ்வீனி ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் உள்ளிட்டவைகளில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டில் தனுஷுடன் நடிக்கும் Sydney Sweeney

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

லெஜண்ட் சரவணன் 2வது பட ஹீரோயின் யார் தெரியுமா? அக்கட தேசத்து நாயகியை இறக்கிய படக்குழு!

வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு – இயக்க போகும் சென்சேஷன் இயக்குனர்!

நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை – ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் – ஜோடி புறாவை பிரித்த மக்கள் – யார் தெரியுமா?

சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை – அடேங்கப்பா இந்த ஹீரோயினா!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top