Home » சினிமா » இறந்த மனைவிக்கு கோவில் கட்டும் மதுரை முத்து – உருக்கமாக போட்ட INSTAGRAM பதிவு!

இறந்த மனைவிக்கு கோவில் கட்டும் மதுரை முத்து – உருக்கமாக போட்ட INSTAGRAM பதிவு!

இறந்த மனைவிக்கு கோவில் கட்டும் மதுரை முத்து - உருக்கமாக போட்ட INSTAGRAM பதிவு!

சின்னத்திரை பிரபல நடிகரான மதுரை முத்து இறந்த தனது முதல் மனைவிக்கு கோவில் கட்டும் பணியை செய்து வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மதுரை முத்து:

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கலக்கப்போவது யாரு சீசன் 10ல் நடுவராக இருந்து வருபவர் தான் மதுரை முத்து. மேலும் விஜய் டிவியின் முன்னணி காமெடி நடிகராக இருந்து அவர் பல்வேறு tv ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி, அவர் பட்டிமன்றங்கள், மேடை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் எந்த சோசியல் மீடியா பக்கம் சென்றாலும் கூட, அவருடைய ப்ரொபேர்ட்டி காமெடி தான் வைரலாக இருந்து வருகிறது. என்னதான் அவர் சந்தோஷமாக இருந்து வந்தாலும் கூட, அவர் வாழ்க்கையில் ஒரு மோசமான அசம்பாவிதம் ஏற்பட்டது. அதாவது,  மதுரை முத்துவின் முதல் மனைவி லேகா கடந்த 2016ம் வருடம் கார் விபத்தில் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். முதல் மனைவி உடன் மதுரை முத்துவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், மதுரை முத்து 2ம் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மதுரை முத்து தனது முதல் மனைவிக்காக ஒரு காரியத்தை செய்துள்ளார். அதாவது, தற்போது மதுரை முத்து இறந்த தனது முதல் மனைவி, அப்பா மற்றும் அம்மா ஆகியோருக்காக தன்னுடைய வீட்டின் அருகிலேயே ஒரு கோவில் கட்டி வருகிறாராம். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும், அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Muthu Ramasamy (@mathuraimuthuofficial)

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!

பிக் பாஸ் 8ல் மிட் வீக் எவிக்‌ஷன் – அதிர்ச்சியுடன் வீட்டுக்கு பொட்டியை கட்டும் போட்டியாளர் யார்?

லெஜண்ட் சரவணன் 2வது பட ஹீரோயின் யார் தெரியுமா? அக்கட தேசத்து நாயகியை இறக்கிய படக்குழு!

வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு – இயக்க போகும் சென்சேஷன் இயக்குனர்!

நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை – ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் – ஜோடி புறாவை பிரித்த மக்கள் – யார் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top