அரசாங்கம் பல்வேறு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது போக்குவரத்து மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்:
தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசாங்கத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்காக பல்வேறு காப்பீட்டு திட்டத்தையும் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, மாநகர போக்குவரத்து இலவசமாகவே காப்பீட்டு திட்டம் வழங்குவது தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பணியாளர்கள் வைத்திருக்கும் சேமிப்பு சம்பள கணக்கு வங்கியின் வாயிலாக காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்த இருக்கிறது. இது தொடர்பாக ஊழியர்களின் வங்கிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. எனவே இதன் முதற்கட்டமாக தற்போது, இந்தியன் வங்கி, கனரா வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகளில் சம்பள கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு காப்பீட்டுத் திட்டங்களை வழங்க அரசு முன் வந்துள்ளது. மேலும் இந்த சலுகை பெற எந்த ஒரு கூடுதல் தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்று மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மருத்துவ காப்பீட்டு திட்டம் – 60 லட்சம் ரூபாய் வரை காப்பீடு – அரசு அசத்தல் அறிவிப்பு!
கனரா வங்கி:
இந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஊழியர்களில் 50 ஆயிரம் அளவுக்கு ஊதியம் வாங்குபவர்களுக்கு கால காப்பீட்டுத் தொகையை 3 லட்சம் ரூபாய் என்று, தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத்தொகை 16 லட்சம் ரூபாய் என்றும், அதே போல் 54 லட்சம் ரூபாய் வரை தனிப்பட்ட விபத்து காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி:
Indian Bank-ல் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வாங்கும் பணியளர்களுக்கு 50 லட்சம் வரை தனிப்பட்ட விபத்து காப்பீட்டு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் 5 வினாடிகளில் நிலநடுக்கம்…பீதியில் மக்கள்..!! முழு விவரம் உள்ளே!!
பேங்க் ஆப் பரோடா வங்கி:
Bank of Baroda-ல் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் ஊதியம் பெறும் அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு 30 லட்சம், 40 லட்சம் மற்றும் 60 என்ற அடிப்படையில் தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழகத்தில் நாளை (12.12.2024) மின்தடை பகுதிகள் – அனைத்து மாவட்டங்களின் முழுமையான விவரம் !
2026ல் விஜய் ஆட்சியை பிடிப்பார்… எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடி பேட்டி!
மகா தீபத் திருவிழா: டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?
டிசம்பர் 10ல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!!