Home » பொது » பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா திட்டம்: கால்நடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் – விண்ணப்பிப்பது எப்படி?

பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா திட்டம்: கால்நடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் – விண்ணப்பிப்பது எப்படி?

பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா திட்டம்: கால்நடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் - விண்ணப்பிப்பது எப்படி?

கால்நடை விவசாயிகளுக்காக அரசு கொண்டு வந்த பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா திட்டம் மூலம் ரூ.3 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை விவசாயி:

உலகில் வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது, கால்நடை விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்கும் விதமாக பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம்  1.6 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கி வருகிறது. மேலும் திட்டத்தால் கால்நடை விவசாயிகள் மிக குறைந்த வட்டி விகிதத்தில் வெறும் 4% மற்றும் கடன்களில் கூடுதல் 3% தள்ளுபடி பெறுவதன் மூலமாக பயனடைகிறார்கள். மேலும், விலங்கு வகைகளின் பொறுத்தே கடன் தொகை அமையும். எடுத்துக்காட்டாக, மாடு உரிமையாளர்கள் ஒரு மாட்டிற்கு ₹4,783 பெறலாம், அதே நேரத்தில் எருமை உரிமையாளர்கள் ஒரு எருமைக்கு ₹6,249 பெறலாம். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் கீழ், பாதுகாப்பு வழங்காமல் ₹1.6 லட்சம் வரை கடன் வழங்கி வருகிறது. மேலும் வாங்கிய கடனை ஒரு ஆண்டிற்குள் திருப்பிச் செலுத்தினால், அந்த விவசாயிகள் அடுத்தடுத்து கடன்களுக்கு தகுதி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி உதவி கால்நடை நிர்வாகத்தை மேம்படுத்தவும், விவசாய நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பிக்க தகுதிகள்?

விண்ணப்பதாரர்கள் ஹரியானாவில் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும்.
சுகாதார அட்டைகளுடன் காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகளை உரிமையாளர்கள் வைத்திருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார்
  • பான்
  • இருப்பிடச் சான்று
  • அடையாளச் சான்று
  • பாஸ்போர்ட் புகைப்படங்கள்
  • விலங்குகளின் ஆரோக்கியம் சான்று
  • காப்பீட்டுப் பதிவுகள்

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் அருகாமையில் இருக்கும் பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
(அல்லது) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளுக்கு நேரடியாக சென்று அணுகுவதன் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.மேலும் அந்த வங்கி KYC மற்றும் ஆவண சரிபார்ப்பு போன்றவைகளை  விண்ணப்ப செயல்முறை தகுதியை உறுதி செய்து வருகிறது. எனவே அதன் உறுதி அங்கீகரிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் பசு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது.   

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

2024ன் சிறந்த வார்த்தை “Brain Rot” : ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி அதிரடி அறிவிப்பு!

உலகின் முதல் SMS எது தெரியுமா? யாருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்!

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு – குழுக் காப்பீட்டுத் திட்டம்! எவ்வளவு பணம் கிடைக்கும்?

TN Govt AABC Scheme: அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் மூலம் ரூ.1.5 கோடி பெறுவது எப்படி?

கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் – பிரகதி உதவித்தொகை திட்டம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? நாளை கடைசி நாள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top