தனி நபர் ஒருவர் பயன்படுத்தி வரும் பைக் டாக்ஸிக்கு இனி தமிழகத்தில் தடை விதித்து ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பைக் டாக்ஸி:
தமிழகத்தில் மக்கள் தங்கள் நினைத்த இடத்திற்கு விரைவாக செல்ல பேருந்து, ரயில் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பேருந்து வழித்தடம் இல்லாத பகுதிகளுக்கு செல்லும் மக்கள் ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக ஆட்டோ பயண கட்டணம் அதிகரித்து காணப்பட்டு வருவதால், மக்கள் அவதி பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சென்னை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் பைக் டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் ராபிடோ மற்றும் ஓலா போன்ற நிறுவனங்கள், பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த பைக் டாக்ஸி வாயிலாக தனி நபர் ஒருவர் பயணம் செய்து கொள்ளலாம். இதனால் அவசரமாக செல்லும் நபர்களுக்கு டிராபிக்கில் சிக்கும் வாய்ப்பு குறைந்து காணப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு தடை? – தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
மேலும் பைக் டாக்ஸி பயண கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான நபர்கள் அதை நாடி சென்று வருகின்றனர். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். அதாவது, இரு சக்கர வாகனங்களுக்கு வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதால், ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
போக்குவரத்து மருத்துவ காப்பீட்டு திட்டம் – 60 லட்சம் ரூபாய் வரை காப்பீடு – அரசு அசத்தல் அறிவிப்பு!
இதன் எதிரொலியாக, வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024! விண்ணப்பிக்க லிங்க் இதோ !
2026ல் விஜய் ஆட்சியை பிடிப்பார்… எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடி பேட்டி!
திருச்சியில் 5 வினாடிகளில் நிலநடுக்கம்…பீதியில் மக்கள்..!! முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் நாளை (12.12.2024) மின்தடை பகுதிகள் – அனைத்து மாவட்டங்களின் முழுமையான விவரம் !