Home » செய்திகள் » ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டத்திற்கு வருகிற 2025 ஆண்டு ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு ஜனவரி 13 ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

பொதுவாக ஊர் திருவிழாவோ, முக்கிய பண்டிகை நாட்களிலோ மக்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாட அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வருகிற ஜனவரி 13ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானதுக்குரியதாக திருஉத்திரகோசமங்கையில் மங்களநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆருத்ரா தரிசனம் மற்றும் மாணிக்கவாசகா் ஜெயந்தியை முன்னிட்டு மட்டும் சந்தனக்காப்பு மூலவர் மீது களையப்படும்.

அந்த நிகழ்வைக் காண முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வருவார்கள். எனவே இந்த வருடம் திருஉத்திரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிற 2025 ஜனவரி 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை – ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

மகா தீபத் திருவிழா: டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

WTC புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதலிடம் – நெருக்கடியில் சிக்கிய இந்திய அணி!!

வந்தாச்சு மனித வாஷிங் மெஷின் – இனி குளிக்க கூட வேணாம் போலயே – ஜப்பான் நிறுவனம் அறிமுகம்!

அடிலெய்ட் டெஸ்ட் போட்டி:  சிராஜ்க்கு அபராதம் விதித்த ஐசிசி – வெளியான முக்கிய தகவல்!!

டிசம்பர் 10ல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு..  வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!!

தமிழகத்தில் நாளை (12.12.2024) மின்தடை பகுதிகள் – அனைத்து மாவட்டங்களின் முழுமையான விவரம் !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top