இந்த ஆண்டு நடைபெற இருக்கும் திருவண்ணாமலை மகா தீபம் 2024 அன்று, மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மகா தீபம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த வகையில் கடந்த 1ஆம் தேதி திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் தீப மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்படி இருக்கையில், உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா அன்று திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
திருவண்ணாமலை மகா தீபம் 2024 – மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு!
அந்த வகையில் இந்த வருடம் வருகிற டிசம்பர் 13ம் தேதி திருவண்ணாமலை தீப மலையில் 2668 அடி உயரத்தில் மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” வருகிற 13 ஆம் தேதி மாலை திருவண்ணாமலை தீப மலையில் 2668 அடி உயரத்தில் மகா தீபம் ஏற்றப்படும்.
ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
கடந்த 2 ஆண்டுகளாக, 2500 பக்தர்கள் மட்டுமே மலையேறி மகா தீபத்தை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போதைய வானிலை மாற்றத்தின் காரணமாக, இந்த ஆண்டு கோவிலுக்குள் ஏற்றப்படும் பரணி தீபத்திற்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த வருடம் கார்த்திகை தீப திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
போக்குவரத்து மருத்துவ காப்பீட்டு திட்டம் – 60 லட்சம் ரூபாய் வரை காப்பீடு – அரசு அசத்தல் அறிவிப்பு!
தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு தடை? – தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
மகா தீபத் திருவிழா: டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?
அடிலெய்ட் டெஸ்ட் போட்டி: சிராஜ்க்கு அபராதம் விதித்த ஐசிசி – வெளியான முக்கிய தகவல்!!
WTC புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதலிடம் – நெருக்கடியில் சிக்கிய இந்திய அணி!!
நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை – ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!