பிரபல சுற்றுலா தலமான குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் இன்று (டிச. 12) குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குற்றால அருவி:
தென்காசி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக காணப்படுவது குற்றாலம் அருவி. இங்கு தினந்தோறும் ஏகப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர். ஒரு அருவி மட்டுமின்றி அங்கு மெயின் அருவி. ஐந்தருவி. புலி அருவி என ஏகப்பட்ட அருவிகள் இருக்கிறது. அங்கேயும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் எப்போது பார்த்தாலும் அலை மோதி காணப்படும்.
குற்றால அருவியில் இன்று (டிச. 12) குளிக்க தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!
சீசன் பொழுது மட்டுமின்றி மற்ற நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக தான் இருக்கும். கனமழை பெய்யும் சமயத்தில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதினால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை சமீபத்தில் தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
தனியார் மயமாகும் ரயில்வே நிர்வாகம்? உறுதி செய்த மத்திய அரசு!
இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்வதினால் குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – குஷியில் மாணவர்கள்!
மாணவர்களுக்கு Happy நியூஸ்…2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
மனைவியை டைவர்ஸ் செய்த சீனு ராமசாமி – 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது!
PF பணத்தை இனி ATMல் எடுக்கலாம் – 2025ல் அமலுக்கு வரும் புதிய வசதி!
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!