Home » செய்திகள் » தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருது 2025! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருது 2025! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருது 2025! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !

தற்போது தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருது 2025 பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமுதாய மற்றும் சமுதாய நல்லிணக்கத்திற்கான தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருது 2025 ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து குடிமக்களும் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசு பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல்கள் அவர்கள் ஆற்றும் அரசு பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக ) இவ்விருதினை பெற தகுதியுடைவர்கள். இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பை சார்ந்தவர்கள் பிற சாதி,இனம், வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடமைகளையோ வகுப்பு கலவரத்தின் போதே அல்லது தொடரும் வன்முறையில் காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படும். இவ்விருதானது மூன்று அளவுகளில் தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே Rs.20000, Rs.10000 , Rs.5000 க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.

2025 ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருத்திற்கென தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையத்தளத்தில் மட்டுமே 15.12.2024 அன்று அல்லது அதற்க்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெற தகுதியானவர்கள் இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 26.01.2025 குடியரசுதினத்தன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top