தொடர்ந்து கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 24 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று டிச.13 விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
கனமழை:
தமிழ் நாட்டில் கடந்த சில வாரங்களாக வழக்கத்தை விட அதிகமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக காலையில் ஆரம்பிக்கும் இந்த கனமழை இரவு நேரம் வரை விடாமல் பெய்து வருகிறது. இதற்கிடையில் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 3 தினங்களுக்கு முன் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
இப்படி இருக்கையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் இருக்கும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கன மழை பொழிந்து வருகிறது. இதனால் ஓரிரு மாவட்டங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கனமழை எதிரொலியாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024: குகேஷ் அபார வெற்றி – ரூ. 20.8 கோடி பரிசுத் தொகை – குவியும் வாழ்த்துக்கள்!
அதன்படி தமிழகத்தில் உள்ள விழுப்புரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(13.12.2024) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளனர். மேலும், மதுரை, மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, புதுக்கோட்டை, திண்டுக்கல், சேலம், மற்றும் கரூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு 2024! முடிவுகளை காண லிங்க் உள்ளே !
தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருது 2025! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !
IND vs AUS 3வது டெஸ்ட் போட்டி: மழையால் தடைபடுமா? வெளியான வானிலை அறிக்கை!