Home » செய்திகள் » திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி – என்ன நடந்தது?

திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி – என்ன நடந்தது?

திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - 7 பேர் உடல் கருகி பலி - என்ன நடந்தது?

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 7 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்து:

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, திண்டுக்கல் மாவட்டம், நேருஜி நகர் திருச்சி சாலையில் சிட்டி எனப்படும் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தரை தளம் தொடங்கி மொத்தம் 4 மாடி தளங்கள் உள்ளது. தினமும் ஏகப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சரியாக 9 மணியளவில் மருத்துவமனை வரவேற்பு அறையில் திடீரென பயங்கரமான சத்தம் எழுந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் மலமலவென தீ பரவி விபத்து ஏற்பட்டது.  இந்த தீ கொஞ்ச நேரத்தில் தரை தளம் முழுவதும் பரவியது. மின்கசிவு காரணமாக தான் இந்த விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம்,  மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள், ஊழியர்கள் ஆபத்தறியாமல் லிஃப்ட் வழியாக கீழே இறங்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது கூட்டமாக சேர்ந்து போனதால் அங்கு சில பேர் லிப்ட்டுக்குள் சிக்கி கொண்டனர். இதையடுத்து, லிஃப்டை உடைத்து தீயணைப்பு படை வீரர்கள் அவர்களை மீட்டனர். இருந்தாலும், இந்த தீ விபத்தில் திண்டுக்கல் பால திருப்பதி பகுதியைச் சேர்ந்த மணி முருகன் பலியானார். அவருக்கு உதவியாக இருந்த தாய் மாரியம்மாள், மூன்று வயது குழந்தை உட்பட 7 பேர் தீயில் கருகி இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024: குகேஷ் அபார வெற்றி – ரூ. 20.8 கோடி பரிசுத் தொகை – குவியும் வாழ்த்துக்கள்!

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!

Flipkart ஆன்லைன் ஆர்டர் – இனி கேன்சல் செய்தால் கட்டணம்? – வெளியான முக்கிய தகவல்!!

டிசம்பர் 18 முதல் புதிய ஆவின் பால் – ஆவின் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – முழு விவரம் இதோ !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top