நடிகரும் தவெக கட்சி தலைவருமான விஜய் தற்போது TVK கட்சி -யின் 2வது மாநில மாநாடு குறித்து இணையத்தில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் சேர்ந்து பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படம் தான் விஜய்யின் சினிமா கெரியரில் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றனர்.
TVK கட்சி 2வது மாநில மாநாடு – எப்போது தெரியுமா? பக்காவா பிளான் போட்ட தலைவர் விஜய்!
ஏனென்றால் இந்த படத்திற்கு பிறகு விஜய் முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட இருக்கிறார். அதன்படி விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தொடங்கிய கையோடு ஆகஸ்ட்டில் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். அதுமட்டுமின்றி பலரும் எதிர்பார்த்த தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி பிரமாண்டமாக நடத்தி காட்டினார். இதில் 8 லட்சத்திற்கும் மேலான மக்கள் கலந்து கொண்டனர். மேலும் அந்த கூட்டத்தில் விஜய் பேசியது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி – என்ன நடந்தது?
இந்நிலையில் தவெக கட்சியின் இரண்டு மாநில மாநாடு குறித்து முக்கியமான தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் தவெக கட்சியின் 2ம் மாநில மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற திட்டம் தீட்டி வருவதாக இணையத்தில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும் பொறுத்து இருந்து பார்க்கலாம். இப்படி இரண்டாம் மாநில மாநாடு நடந்தால் தலைவர் விஜய் என்னவெல்லாம் பேச போகிறார் என்று மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!
குற்றால அருவியில் இன்று (டிச. 12) குளிக்க தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!
தனியார் மயமாகும் ரயில்வே நிர்வாகம்? உறுதி செய்த மத்திய அரசு!
PF பணத்தை இனி ATMல் எடுக்கலாம் – 2025ல் அமலுக்கு வரும் புதிய வசதி!