Home » சினிமா » எதிர்நீச்சல் 2 குணசேகரன் யார் தெரியுமா? அடேங்கப்பா வேற லெவல் செலக்சன்!

எதிர்நீச்சல் 2 குணசேகரன் யார் தெரியுமா? அடேங்கப்பா வேற லெவல் செலக்சன்!

எதிர்நீச்சல் 2 குணசேகரன் யார் தெரியுமா? அடேங்கப்பா வேற லெவல் செலக்சன்!

பிரபல இயக்குனர் திருச்செல்வம் இயக்க இருக்கும் எதிர்நீச்சல் 2 சீரியலில் புதிய  குணசேகரன் யார் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல்:

சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியலில்  துணை இயக்குனராகவும், நடிகராகவும் தன்னுடைய கெரியரை ஆரம்பித்து, “கோலங்கள்” சீரியல் மூலம் மக்கள் மத்தியில்  இயக்குனராக பிரபலமானவர் தான் திருச்செல்வம். அதுமட்டுமின்றி அதே ‘கோலங்கள்’ சீரியலில் தொல்காப்பியன் என்ற கேரக்டரிலும் நடித்து இருந்தார். இந்த தொடர் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் அடுத்தடுத்து சீரியல்களை இயக்கினார்.

அதன்பின்னர், 2002 ஆம் ஆண்டு எதிர்நீச்சல் என்ற தொடரை இயக்கி ஜீவானந்தம் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்த தொடர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் மறைந்த மாரிமுத்து அவர்கள் தான். அவர் நடித்த குணசேகரன் கதாபாத்திரம் நின்று பேசப்பட்டது. ஆனால் அவரின் மறைவிற்கு பின்னர் வேலராம மூர்த்தி நடித்தார்.

இருந்தாலும் இந்த தொடரின் ரீச் குறைய ஆரம்பித்தது. இதனால் தொடரை வேகமாக முடித்தனர். இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் வர இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. அதன்படி, முதல் பாகத்தில் நடித்த மதுமிதா இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது நினைத்தாலே இனிக்கும் என்ற தொடரில் நடித்த நாயகி பார்வதி நடிக்க இருப்பதாக கூறி ப்ரோமோவை வெளியீட்டு இருந்தனர். மேலும் முதல் பாகத்தில் நடித்த கனிகா, ஹரிப்ரியா இசை, பிரியதர்ஷினி, ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க போகும் நடிகர் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குணசேகரன் கதாபாத்திரத்தில் வேலராம மூர்த்தி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறாராம். அது வேற யாரும் இல்லை சினிமாவில் பிசியாக நடித்து வரும், பிரபல நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் நடிக்கிறார். இந்த தேர்வு சரியாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

மனைவியை டைவர்ஸ் செய்த சீனு ராமசாமி –  17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது!

ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை – சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் செய்த செயல்!

இறந்த மனைவிக்கு கோவில் கட்டும் மதுரை முத்து – உருக்கமாக போட்ட INSTAGRAM பதிவு!

லெஜண்ட் சரவணன் 2வது பட ஹீரோயின் யார் தெரியுமா? அக்கட தேசத்து நாயகியை இறக்கிய படக்குழு!

வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு – இயக்க போகும் சென்சேஷன் இயக்குனர்!

நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை – ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top