UPI வாயிலாக பண பரிமாற்றம் செய்யும் PhonePe ஆப்பில் விரைவு கடன் வழங்க இருப்பதாக போன் பே நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடன்:
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே ஆன்லைன் என்று ஆகிவிட்டது. எந்த கடைகளுக்கு சென்றாலும் தங்களது தேவையான பொருட்களை வாங்கி ஆன்லைன் பேமெண்ட் தான் செய்கிறார்கள். அதில் ஒரு மொபைல் பேமெண்ட் தளம் என்றால் அது போன்பே (PhonePe) தான். இந்த ஆப்பை பயன்படுத்தி நீங்கள் UPI வாயிலாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். குறிப்பாக, ரீசார்ஜ் செய்வது மற்றும் கரண்ட் பில் போன்றவைகளை சுலபமாக செலுத்தி கொள்ளலாம்.
PhonePe ஆப்பில் விரைவு கடன் – 48 மணிநேரத்திற்குள் கிடைக்கும் பணத்தொகை!
மேலும் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் இருந்து பயனர்களைப் பாதுகாக்கவும் இந்த போன்பே மூலதனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் போன்பே ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போன்பே பயனர்களை கவரும் விதமாக பல்வேறு வசதிகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது தகுதியான பயனாளிகளுக்கு விரைவு கடன் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே இந்த விரைவு கடனை பெற விரும்புபவர்கள் முதலில் போன்பே செயலிக்குள் சென்று கடன் விருப்பம் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
TVK கட்சி 2வது மாநில மாநாடு – எப்போது தெரியுமா? பக்காவா பிளான் போட்ட தலைவர் விஜய்!
அதில் வீடு, சொத்து, பைக், கார், கல்வி, தங்கம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் என பட்டியலில் இருக்கும் ஏதேனும் விருப்பத்தை தேர்வு செய்யலாம். அதன்பின்னர் உங்களுக்கு தேவையான கடன் தொகை மற்றும் கால அளவைத் தேர்ந்தெடுத்து, இஎம்ஐ மற்றும் தினசரி தவணைகள் போன்ற திருப்பிச் செலுத்தும் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். இதையடுத்து, உங்களின் கடன் விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் மதிப்பாய்வு செய்யப்படும். கடைசியாக விதிமுறைகளை நீங்கள் ஒப்புக் கொண்ட பின்னர் போன்பே அங்கீகரிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள் பயனாளரின் வங்கிக் கணக்கிற்கு கடன் தொகை செலுத்தப்படும் என போன் பே நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
மாணவர்களுக்கு Happy நியூஸ்…2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி – என்ன நடந்தது?
24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!