சன் டிவியின் சூப்பர் டூப்பர் ஹிட்டான ரோஜா சீரியல் 2வது சீசன் விரைவில் வரப்போகிறது என்பது குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது.
Sun TV:
பொதுவாக சீரியல் என்று நாம் எடுத்துக் கொண்டால் சன் தொலைக்காட்சி தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு நிறைய வெற்றிகரமான தொடர்களை கொடுத்துள்ளது. ஏன் இப்பொழுது கூட நிறைய சீரியல் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டு வருகிறது. சொல்ல போனால் கடந்த சில வாரங்ககளாக டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி தான் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் மக்களின் ஃபேவரைட் தொடராக பார்க்கப்பட்ட சீரியல் தான் ரோஜா.
ரோஜா சீரியல் 2வது சீசன் வரப்போகிறது? .. ஹீரோயின் யார் தெரியுமா?
இந்த சீரியலில் சிப்பு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி லீடு ரோலில் நடித்திருந்தனர். அவர்கள் முதல் முறையாக ஜோடியாக நடித்திருந்தாலும் கூட அப்போது டிஆர்பி ரேட்டிங்கில் ஃபர்ஸ்ட் இடத்தில் தான் இருந்தது. மேலும் அந்த சீரியலில் அவர்களுடைய கெமிஸ்ட்ரி வேறு எந்த சீரியலிலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவர்களுடைய கெமிஸ்ட்ரி பேசப்பட்டது.
அல்லு அர்ஜுனிடம் போலீஸ் விசாரணை – “புஷ்பா 2” படத்தால் வந்த சோதனை!
இந்த தொடர் முடிவடைந்த பின்னர் நாயகன்-நாயகி இருவருமே வேறொரு சீரியல்களில் நடித்து வந்தனர், தற்போது அதுவும் முடிவுக்கு வந்து விட்டது. இந்நிலையில், சன் டிவியின் ஹிட் சீரியலான “ரோஜா” தொடரின் 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. அதாவது ரோஜா 2 சீசன் விரைவில் வரப்போகிறதாம், இதில் நாயகியாக பிரியங்கா நல்காரி தான் நடிக்க இருக்கிறார் என்கின்றனர். ஆனால், இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
மும்பையில் பாதியில் நிறுத்தப்பட்ட ‘புஷ்பா 2’ .. மயக்கம் போட்ட ரசிகர்கள் – என்ன நடந்தது தியேட்டரில்?
பிக்பாஸ் தொகுப்பாளருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் – உண்மையை உடைத்த பிரபல நடிகை!
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் – வெளியான கியூட் புகைப்படம்!!
எதிர்நீச்சல் 2 குணசேகரன் யார் தெரியுமா? அடேங்கப்பா வேற லெவல் செலக்சன்!