Home » செய்திகள் » நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் – தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு !

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் – தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு !

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் - தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு !

தற்போது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “புஷ்பா 2”. மேலும் இந்த படத்தின் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவதற்கு முன்தினம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர உள்ளதாக தகவல் வெளியானதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அத்துடன் இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இதை அறிந்த ரசிகர்கள், அல்லு அர்ஜுனை காண திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஏராளமானோர் மயங்கி கீழே விழுந்தனர். அத்துடன் 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று தனது வீட்டில் வைத்து அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் கைதான அல்லு அர்ஜுனிடம் போலீசார் விசாரணை நடத்தியபின், நம்பள்ளிகோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து அல்லு அர்ஜுன் வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டறிந்த மாஜிஸ்திரேட், அல்லு அர்ஜுனை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஹைதராபாத் உயர்நீதிமன்றம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தற்போது இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top