பிரபல அரசியல்வாதி காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன்:
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவன் விளங்கி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து மக்களுக்காக பாடுபட்டார். சில மாதங்களுக்கு முன்னர் அவருடைய மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதையடுத்து, இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக பதவி ஏற்றார்.
காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு – மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவல்!!
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு நுரையீரல் பகுதியில் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து, அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
பிரபல நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
அந்த சமயம் இளங்கோவனை முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து தற்போது ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் தொண்டர்கள் பெரும் சோகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் அவர் மீண்டு வர பலரும் கடவுளை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் – தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு !
திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி – என்ன நடந்தது?
24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
மாணவர்களுக்கு Happy நியூஸ்…2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி – என்ன நடந்தது?
PhonePe ஆப்பில் விரைவு கடன் – 48 மணிநேரத்திற்குள் கிடைக்கும் பணத்தொகை!
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!