பாஜக அரசு கொண்டு வந்த ஒரே நாடு ஒரே தேர்தல் வருகிற 2029ல் அமல் படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
One Nation One Election:
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து எல்லா சட்ட மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்ட மசோதாவுக்கு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிலையில், வரும் 16 ஆம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் லோக்சபாவில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்? .. டிசம்பர் 16 ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல்!
அதாவது, மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், மக்களவையின் 543 தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தை ஆய்வு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பரில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது குறிப்பித்தக்கது. மேலும் பதவிக்காலம் 5 ஆண்டுகள் எனில், முடிவுக்கு வரும் சமயத்தில் தான் தேர்தல் நடத்தப்படுகிறது. அதிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வருடத்தில் தேர்தல் நடைபெறுவதால், அதிக பொருட் செலவு ஏற்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு – மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவல்!!
அது போக மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுவதாக கூறி மத்திய பாஜக அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்நிலையில் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ராம் மேக்வால் தாக்கல் செய்ய உள்ளார். எல்லாம் சரியாக நடந்தால், வருகிற 2029 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலின் போது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் – தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு !
பிரபல நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!