காங்கிரஸ் மூத்த தலைவரும், MLA -வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் என்று மாநில கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார்.
EVKS இளங்கோவன்:
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக பதவி வகித்து வந்தவர் தான் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி தொந்தரவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு நுரையீரலில் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
MLA ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் – வெளியான ஷாக்கிங் தகவல்!
இதனால் அவரை வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை கொடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் இருந்து அவரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், அவரை 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டதாகவும் மருத்துவர்கள் இன்று காலை தெரிவித்திருந்தனர். மேலும் தொடர்ந்து அவருடைய உடல்நிலை பின்னடை ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்? .. டிசம்பர் 16 ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல்!
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கட்சியின் மாநில கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் அவரது உடல் மருத்துவமனையில் இருந்து, அவருடைய சொந்த வீட்டில் வைக்கப்படும் என்றும் அதன் பின்னர் பின்னர் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அவரின் இழப்பால் தொண்டர்கள் கண்ணீர் மழையில் தத்தளித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு – மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவல்!!
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் – தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு !
24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!