பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியா இந்தியா 3வது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டி:
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ரீவிட் அடித்தது. இதனை தொடர்ந்து பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று இரு அணிகளுக்கும் இடையே 3வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா இந்தியா 3வது டெஸ்ட் போட்டி – மழை காரணமாக பாதியில் நிறுத்தம்!
இதனால் பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று முனைப்புடன் இருந்து வருகிறது. அதன்படி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வினி தங்களது ஆட்டத்தை தொடங்கினர். இப்படி இருக்கையில், இந்த போட்டி நடக்கும் பிரிஸ்பேனில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், இன்றைய நாளில் அங்கு 50 சதவிகிதம் மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர தடை – மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!
இதனை தொடர்ந்து போட்டி ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் 3 வது டெஸ்ட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் மழை நிற்கும் வரையில் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆஸ்திரேலியா அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் 19 ரன்களிலும் நாதன் 4 ரன்களிலும் நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளனர். இன்னும் சில மணி நேரம் மழை நீடித்தால், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும். பின்னர் நான்கு நாட்கள் ஆட்டம் மட்டுமே மீதம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
MLA ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் – வெளியான ஷாக்கிங் தகவல்!
BJP எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!
தமிழகத்தில் ஞயிற்றுக்கிழமை (15.12.2024) நாளை மின்தடை உண்டா? இதோ முழு விபரம்
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!