சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் இடம்பெற்றுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
படை தலைவன்:
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் தான் சண்முகபாண்டியன். அவர் “மதுர வீரன்” என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். அந்த படம் அவருக்கு பெரிய அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை. தற்போது வரை அவர் ஹிட் கொடுக்க போராடி வருகிறார். இதற்கிடையில், கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் – பெரிய ஹைப்பை எகிறவிட்ட சண்முகபாண்டியன்!!
இதனை தொடர்ந்து தற்போது, சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அன்பு என்பவர் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்னர், வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!
இந்நிலையில் சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது அனைவரது மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் ட்ரைலர் வீடியோவில் கடைசி நொடியில் ரமணா படத்தில் இடம்பெற்ற விஜயகாந்த் வரும் விதமாக காட்சி ஒன்று ரீ கிரியேட் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ரமணா படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த யூகி சேது அதே வேடத்தில் இந்த படத்திலும் நடித்துள்ளார். டீசரில் சமீபத்தைய சென்சேஷனல் ஹிட்டான ‘நீ பொட்டுவச்ச தங்க கொடம்’ பாடலும் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
எதிர்நீச்சல் 2 குணசேகரன் யார் தெரியுமா? அடேங்கப்பா வேற லெவல் செலக்சன்!
புஷ்பா 2 அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை – ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் குடும்பம்!
ரோஜா சீரியல் 2வது சீசன் வரப்போகிறது? .. ஹீரோயின் யார் தெரியுமா?
டைவர்ஸ் செய்யும் பிக்பாஸ் பிரபலம் – அடக்கடவுளே இந்த ஜோடியும் பிரிய போகுதா?