தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கட்சியில் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சேரும் விதமாக ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
TVK VIJAY:
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பல்வேறு கட்சியிலிருந்து சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் இருந்து தான் பெரும்பாலான நபர்கள் தவெக கட்சியில் சேர்ந்து வருகின்றனர். மேலும் விஜய் ஒரு பக்கம் சினிமாவையும் ஒரு பக்கம் அரசியலையும் கையாண்டு வருகிறார். அதுமட்டுமின்றி கட்சியை தவிர்த்து, பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் விஜய். அதன்படி, சமீபத்தில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அவருடன் சேர்ந்து, விசிகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். மேலும் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதன் தொடர்பாக கட்சியின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறி 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த முடிவுக்கு திமுக கட்சி கொடுத்த அழுத்தமே காரணம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விசிகவில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் கட்சியில் சேரும் ஆதவ் அர்ஜுனா? .., அவரே கொடுத்த அதிரடி விளக்கம்!!
அரையாண்டு தேர்வுகள் தேதி அறிவிப்பு? .., கலக்கத்தில் மாணவர்கள்.., வெளியான முக்கிய தகவல்?
மேலும், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து விமான நிலையத்தில் ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இணைப்பு என்பதை தாண்டி, என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன். எதிர்கால திட்டம் குறித்து விரைவில் செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பேன்” என தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது, தவெக கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஆதார் கார்டை புதுப்பிக்க ஜூன் 14 தான் கடைசி – இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கை!
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!
160 பந்தில் 152 ரன் விளாசிய ட்ராவிஸ் ஹெட்! இந்திய அணிக்கு தலைவலி கொடுத்த தலை
தமிழகத்தில் நாளை (17.12.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!