தற்போது 2025 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு போகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனா மற்றும் ஈரான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை ரஷ்யா விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவும் இப்பட்டியலில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
2025 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு போகலாம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ரஷ்யா:
இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான ரஷ்யா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இ-விசா வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த விசா விண்ணப்பித்த 4 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சுற்றுலாவை அதிகரிக்க விசா கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் இந்தியா மற்றும் ரஷ்யா அதிகாரிகள் ஆலோசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
விசா இல்லாமல் ரஷ்யா பயணம்:
இதனையடுத்து வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு 60,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாஸ்கோவிற்கு பயணம் செய்கிறார்கள். மேலும் இது 2022 உடன் ஒப்பிடும்போது 26% அதிகரிப்பாகும்.
வோடபோன் ஐடியா 5ஜி சேவை அறிமுகம் – எங்கெல்லாம் தெரியுமா?
இதற்க்கு முன்பு 2023 ஆகஸ்ட் முதல் சீனா மற்றும் ஈரான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை ரஷ்யா விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கிறது. இதனையடுத்து தற்போது இந்தியாவும் இந்த பட்டியலில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தியா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்:
4.67 கோடி TAX கட்டிய குகேஷ் – வெளியான ஷாக்கிங் தகவல்!!
பும்ராவை குரங்குடன் ஒப்பிட்ட வீராங்கனை – பகிரங்க மன்னிப்பு கோரினார்!!
2024 கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!
விஜய் கட்சியில் சேரும் ஆதவ் அர்ஜுனா? .., அவரே கொடுத்த அதிரடி விளக்கம்!!