Home » செய்திகள் » சவுக்கு சங்கர் இன்று(டிசம்பர் 17) கைது – என்ன காரணம் தெரியுமா?

சவுக்கு சங்கர் இன்று(டிசம்பர் 17) கைது – என்ன காரணம் தெரியுமா?

சவுக்கு சங்கர் இன்று(டிசம்பர் 17) கைது - என்ன காரணம் தெரியுமா?

போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த சவுக்கு சங்கர் இன்று(டிசம்பர் 17) கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது:

பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகராக விளங்கி வந்தவர் சவுக்கு சங்கர். அதுமட்டுமின்றி, அவர் ‘‘சவுக்கு மீடியா’’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கிடையே பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்னர், தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி -யில் 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாக  கூறி சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன்படி, அவர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு சில வாரங்கள் சிறைக் காவலில் இருந்து வந்தவர். சிறை உத்தரவை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் சவுக்கு சங்கர் வெளியே வந்தார்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஆனால், சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். இதனால் அவர் மீது பிடிவாரண்ட் போடப்பட்டது. இந்நிலையில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

முதியவர்களுக்கு இலவச பேருந்து பயணம் – டோக்கன் எப்போது வழங்கப்படும்?

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025.., சான்றிதழ் பதிவு செய்ய டிசம்பர் 18 தான் கடைசி தேதி!

சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா மறைவு – பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்நாட்டில் நாளை (18.12.2024) மின்தடை பகுதிகள் ! TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top