மோசடிகளை தடுக்க நாடு முழுவதும் ATMல் ரிசர்வ் வங்கி புதிய விதி ஒன்றை கொண்டு வந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
ஏடிஎம் இயந்திரம்:
இன்றைய காலகட்டத்தில் எல்லாமே அடுத்த கட்டத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். ஆனால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இன்னும், பணத்தை ரொக்கமாகவே பயன்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் வங்கி சென்று தான் பணத்தை எடுக்க முடிந்தது. ஆனால் இப்பொழுது மூளை முடுக்கிலும் ATM மிஷின் இருக்கிறது. அதன் மூலம் மக்களை தங்களுக்கு தேவையான பணத்தை ரொக்கமாக எடுத்து செல்கின்றனர்.
இப்படி இருக்கும் நிலையில், சமீபகாலமாக மோசடியாளர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் புது வித மோசடிகளை அரங்கேற்றி வருகிறது. தெளிவாக சொல்ல போனால், ஏடிஎம் மிஷின் பணம் வெளிவரும் இடத்தில் போலி கார்டு ஒன்றை வைக்கின்றனர். அந்த நேரத்தில் யாராவது பணத்தை எடுக்க முயற்சிக்கும் பொழுது, பணம் வெளியே வராமல் இடையில் சிக்கிக் கொள்ளும். இதையடுத்து ATM மிஷினில் பணம் இல்லை என்று நினைத்து கிளம்பி விடுகிறார்கள். வாடிக்கையாளர் வெளியே சென்றவுடன் மோசடியாளர்கள் போலி கார்டை எடுத்துவிட்டு, அதில் உள்ள பணத்தை எடுத்து கொள்கின்றனர்.
ATMல் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதி – இனி இந்த மோசடி செய்ய முடியாது!
பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் .., 2025 பிப்ரவரி மாதம் தேர்வு?
இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த மோசடியை கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இனி ஏடிஎம் மிஷினில் இருந்து பணம் வெளியே வந்து சுமார் 30 வினாடிகளுக்குள் அப்பணத்தை எடுக்க தவறினால் அந்த பணம் மீண்டும் உள்ளே சென்று விடும். அந்த பணம் வாடிக்கையாளர் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படும். ஒரு வேலை பணம் உங்கள் அக்கவுண்டில் வரவில்லை என்றால் பேங்க்கு சென்று முறையிடலாம் என்று தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழகத்தில் நாளை (19.12.2024) மின்தடை பகுதிகள்! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !
சவுக்கு சங்கர் இன்று(டிசம்பர் 17) கைது – என்ன காரணம் தெரியுமா?
IND Vs AUS 3rd test match: தோல்வி விளிம்பில் இந்தியா – குறுக்கே புகுந்த கனமழை!!
முதியவர்களுக்கு இலவச பேருந்து பயணம் – டோக்கன் எப்போது வழங்கப்படும்?
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025.., சான்றிதழ் பதிவு செய்ய டிசம்பர் 18 தான் கடைசி தேதி!