நேற்று நடைபெற்ற குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் விரைவில் ஹோம் ஆப் செஸ் அகாடமி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Home of Chess Academy:
சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற World Chess Championship தொடரின் 14 வது போட்டியில் சீனாவின் டிங் லாரனை எதிர்த்து இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான குகேஷ் போட்டியிட்டார். அந்த போட்டியில் டிங் லாரனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று, சென்னை கலைவாணர் அரங்கில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஹோம் ஆப் செஸ் அகாடமி .., குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!
அதில் தமிழக அரசு சார்பில் குகேஷுக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,” செஸ் போட்டியில் புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்ம பையன் குகேஷ். அவருடைய திறமையாலும் உழைப்பாலும் தான் அவருடைய கனவை நினைவாகி இருக்கிறார். அவருடைய 7 வயதில் செஸ் பயிற்சிக்குள் நுழைந்து 9 வயதில் கேண்டிடேட் மாஸ்டர் பட்டத்தை வென்று, 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று, இன்று உலக சாம்பியனாகி இருக்கிறார்.
ATMல் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதி – இனி இந்த மோசடி செய்ய முடியாது!
இது நம் தமிழகத்திற்கு பெருமை. இதனால் தான் கிராண்ட் மாஸ்டர்கள் உங்களை எல்லாம் அழைத்து குகேஷுக்கு இந்த பாராட்டு விழா நடத்துகிறோம். மேலும் குகேஷ் போல மற்ற இளைஞர்களும் சாதனை படைக்க வேண்டும். செஸ் விளையாட்டை ஊக்குவிக்க ‘ஹோம் ஆப் செஸ் அகாடமி’ என்ற சிறப்பு செஸ் அகாடமி அமைக்கப்படும். இந்தியாவில் உள்ள 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழகத்தில் நாளை (19.12.2024) மின்தடை பகுதிகள்! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !
பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் .., 2025 பிப்ரவரி மாதம் தேர்வு?
எலான் மஸ்க் தொடங்கும் XMail – ஜிமெயிலுக்கு போட்டியா!
சவுக்கு சங்கர் இன்று(டிசம்பர் 17) கைது – என்ன காரணம் தெரியுமா?