தமிழகத்தில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கு தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ரூ 3.50 லட்சம் கொடுக்கும் விதமாக 400 கோடி ஒதுக்கி இருப்பதாக மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
kalaignar kanavu illam scheme:
திமுக கட்சி ஆட்சியை பிடித்ததில் இருந்து தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் “kalaignar kanavu illam scheme” செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் விதமாக வருகிற 2030-ஆம் வருடத்திற்குள் ஊரக பகுதிகளில் 6 வருடங்களில் 8 லட்சம் வீடுகள் புதிதாக கட்டித்தர அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு. சமையலறை உட்பட, 360 சதுர அடியாகும். மேலும் இந்த திட்டத்தின் வாயிலாக கட்டப்படும் வீடுகளுக்கு தேவைப்படும் TANCEM சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
ஹோம் ஆப் செஸ் அகாடமி .., குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!
எனவே தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாடு அரசால் ரூ.1051.34 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இப்பொழுது மேலும், ரூ.400 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது. தற்போது ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.1451.34 கோடி பெறப்பட்டு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி – வெளியான ஷாக்கிங் தகவல்!!
ATMல் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதி – இனி இந்த மோசடி செய்ய முடியாது!
தமிழகத்தில் நாளை (19.12.2024) மின்தடை பகுதிகள்! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !
பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் .., 2025 பிப்ரவரி மாதம் தேர்வு?
எலான் மஸ்க் தொடங்கும் XMail – ஜிமெயிலுக்கு போட்டியா!
சவுக்கு சங்கர் இன்று(டிசம்பர் 17) கைது – என்ன காரணம் தெரியுமா?