அல்லுஅர்ஜூன் புஷ்பா 2 பட கூட்ட நெரிசலில் சிக்கி, மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்த 8 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துள்ளார்.
Pushpa 2:
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் அல்லு அர்ஜுன் சினிமா கெரியரில் மிக முக்கியமான திரைப்படம் தான் புஷ்பா. இதன் முதல் பாகம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து படத்தின் 2ம் பாகம் செம மாஸாக தயாராகி கடந்த டிசம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படம் வெளியாகி 13 நாட்கள் கடந்த நிலையில் மொத்தம் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி தனது மனைவியுடன் வந்து ரசிகர்களுடன் திரையரங்கில் படம் பார்த்தார் அல்லு அர்ஜுன். அப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு அசம்பாவிதம் நடைபெற்றது. அதாவது, அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் அங்கேயே உயிரிழக்க அவரது மகன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் சமீபத்தில் அந்த பெண் இறந்தது தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.
புஷ்பா 2 பட கூட்ட நெரிசல் விவகாரம் – அம்மாவை தொடர்ந்து 8 வயது சிறுவன் மூளைச்சாவு!!
பிக்பாஸ் தீபக் பெயரில் போலி PR – சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் பரபரப்பு புகார்!
அதன் பிறகு ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அவரின் ரிலீசுக்கு பிறகு தான் புஷ்பா பட வசூல் 70 சதவீதம் அதிகரித்துள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் மகன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!
மருத்துவமனையில் பிக்பாஸ் ராணவ் – ரெட் கார்டு வாங்கி வெளியேறும் ஜெஃப்ரி?
45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் – சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!
படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் – பெரிய ஹைப்பை எகிறவிட்ட சண்முகபாண்டியன்!!