தேர்வாணையம் நடத்தும் TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு 2024 தேதி மாற்றம் குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தேர்வு:
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் (TNPSC)டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படுத்தி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை கிட்டத்தட்ட 5,81 லட்சம் பேர் எழுதினர். மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் 213 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 2,540 காலிப்பணியிடங்களாக உயர்த்தப்பட்டது.
TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு 2024 தேதி மாற்றம்? தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!
இதன் முடிவுகள் கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து, முதன்மைத் தேர்விற்கு தேதிகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வின் முதல் தாள் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 2ஏ பதவிக்கான இரண்டாம் தாள் தேர்வு முறையும் மாற்றப்பட்டுள்ளது.
இனி ரேஷன் கார்டு தேவை இல்லை.., மேரா ரேஷன் 2.0 செயலி போதும்.., மத்திய அரசு அசத்தல் திட்டம்!!
மேலும் சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பதவிகளுக்கு இரண்டாம் தாள் கணினி முலமாக நடைபெற்றது. அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணத்தினால் ரத்து செய்யப்பட்டது. அதனைக் கருத்தில் இம்முறை தேர்வு ஓஎம்ஆர் (OMR) முறையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு | பிந்தைய தேர்வு தேதி | மாற்றப்பட்ட தேதி |
குரூப் 2 மற்றும் 2ஏ முதல் தாள் | 02.02.2025 | 08.02.2025 |
குரூப் 2 இரண்டாம் தாள் | 23.02.2025 | 23.02.2025 (மாற்றமில்லை) |
குரூப் 2ஏ இரண்டாம் தாள் | 08.02.2025 | 08.02.2025 (மாற்றமில்லை) |
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024! நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும்
தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்கள் !
ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டி.., நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய்!!