காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
வழக்குப்பதிவு:
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதில் இந்திய அரசியலமைப்பு மீதான சிறப்பு விவாதம் தொடர்பாக இரு அவைகளிலும் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த கூட்டத்தின் போது, ராஜ்யசபாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசினார். அது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும் இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு .., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
அதன்படி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில், அதே பகுதியில் காங்கிரஸ் ஆட்சியின் போதும் அம்பேத்கரை அவமதித்தாக கூறி பாஜக எம்பிகளும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்? தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!
இந்த தள்ளு முள்ளுவின் போது, பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி, ராகுல் காந்தி எம்பி ஒருவரை என் மீது தள்ளி விட்டார்” இதனால் தனக்கு பலத்த காயமடைந்து என்று ரத்தம் வழிய புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், டெல்லி போலீசார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்துள்ளனர். அந்த FIR ல் 117 (தன்னிச்சையாக கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்), 115 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 131 (குற்ற சக்தியைப் பயன்படுத்துதல்), 125 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துவது), 351 உள்ளிட்ட சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
இனி ரேஷன் கார்டு தேவை இல்லை.., மேரா ரேஷன் 2.0 செயலி போதும்.., மத்திய அரசு அசத்தல் திட்டம்!!
சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024! நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும்
தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்கள் !
ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டி.., நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய்!!