இஸ்ரோ விஞ்ஞானிகள் PSLV-C-60 ராக்கெட் வருகிற டிசம்பர் 30ம் தேதி launch செய்யபட இருப்பதாக ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளனர்.
பி.எஸ்.எல்.வி.- சி-60 ராக்கெட்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடர்ந்து பல்வேறு விண்வெளி திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மேலும் விண்வெளியில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 உள்ளிட்ட ராக்கெட்டுகளை அனுப்பி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியது.
PSLV-C-60 ராக்கெட் டிசம்பர் 30ம் தேதி launch.., இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!
மேலும், வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியதன் மூலம், உலக சந்தையில் முன்னணி அமைப்பாக திகழ்ந்து வருகிறது. தனது கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ இப்பொழுது வரை தீவிரமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, வருகிற 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ஸ்பேஸ்-எக்ஸ் எனும் திட்டம் தற்போது செயல்படுத்த இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரஷீத் கான்? .., அப்ப ஹர்திக் பாண்டியா? .., அம்பானி போட்ட மாஸ்டர் பிளான்?
அதன்படி, பி.எஸ்.எல்.வி.- சி-60 ராக்கெட்டை வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி (திங்கட்கிழமை) விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ‘ஸ்பேட் எக்ஸ்’ என்ற இந்த பணியில் மொத்தம் இரண்டு செயற்கை கோள்கள் அனுப்ப இருக்கிறது. அதன்படி, எஸ்.டி.எக்ஸ்-01 மற்றும் எஸ்.டி.எக்ஸ்-02 என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. மேலும் இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவ தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு .., வெளியான முக்கிய அறிவிப்பு!!
2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை .., மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!
அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு.., அரசு வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!
ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு .., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!