பிரபல நடிகர் பப்லு காதலி ஷீத்தல் தற்போது விளையாட்டு வீரரை கல்யாணம் செய்து இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பிரித்திவிராஜ்:
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளுக்கும் நடித்தார். கடைசியாக ஹிந்தியில் வெளியான அனிமல் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவரின் கைவசம் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘ஏஸ்’ திரைப்படத்தில் பப்லு பிரித்திவிராஜ் வில்லன் ரோலில் நடித்து வருகிறார்.
மேலும் தமிழில் ஏராளமான திரைப் படங்களில் நடித்திருந்தாலும், இவரை மிகவும் பிரபலமடைய வைத்தது அஜித் – சிம்ரன் நடிப்பில் வெளியான ‘அவள் வருவாளா’ திரைப்படம் தான் அவருடைய கெரியரை மாற்றி அமைத்தது என்று சொல்லலாம். இதற்கிடையில் கடந்த ஆண்டு அவர் ஷீத்தல் என்பவரை காதலித்து திருமணம் செய்ய இருந்தார். அவருடைய செய்தி இணையத்தில் வைரலான நிலையில் பலரும் கேலி கிண்டலுக்கு ஆளானார்.
விளையாட்டு வீரரை மணமுடித்த பப்லு காதலி ஷீத்தல்.., அடேங்கப்பா ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே!!!
பிக்பாஸில் சாதனை படைத்த ஜாக்குலின்.., BB வரலாற்றில் இதுவே முதல் முறை!!
ஆனால், அண்மையில் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது. இதை பப்லு உறுதி செய்யவில்லை என்றாலும் ஷீத்தல், பப்லு உடனான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் நீக்கி உறுதி செய்தார். இந்நிலையில், ஷீத்தல் தன்னுடைய நண்பரையே திருமணம் செய்து கொண்டுள்ளதாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை முகத்தை காமிக்கவில்லை. மேலும் அவரின் கணவர் ஒரு தடகள விளையாட்டு வீரர் என்று கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
விடாமுயற்சி படத்தின் புக்கிங் தொடங்கியது.., எங்கு தெரியுமா?.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
டைவர்ஸ் வாங்கிய பிரபல சீரியல் நட்சத்திர ஜோடி.., அதிர்ச்சியில் சின்னத்திரை!!
புஷ்பா அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.., 8 பேர் அதிரடி கைது!!
அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!