BSNL நிறுவனம் தமிழகத்தில் வருகிற 2025ல் மார்ச் மாதம் eSIM சேவை அறிமுகம் செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இ-சிம்:
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்க்கு(BSNL) மாறி வருகின்றனர். அதன்படி, கடந்த 4 மாதங்களில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனாக உயர்ந்துள்ளது. மற்ற நிறுவனங்களை விட BSNL குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் 2025ல் eSIM சேவை அறிமுகம் – BSNL நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!
இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் 1 லட்சம் 4G டவர்களை நிறுவுவதை இலக்காக கொண்டு தான் BSNL நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் எப்போது பிஎஸ்என்எல் E-Sim அறிமுகப்படுத்தப்படும் என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பிஎஸ்என்எல் இயக்குநர், தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் eSIM சேவை கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார். இந்த eSIM என்பது “எம்பெடட் சிம்” என்று பொருள்.
அரசு ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்.., போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு!!
இந்த சிம் மற்ற சிம்களை மாதிரி இல்லாமல் செல்போனின் மதர்போர்டிலே பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிம் பொருத்தப்பட்ட 5 நிமிடங்களில் ஆக்டிவேட் செய்துவிட முடியும். மேலும் இந்த eSIM பயன்படுத்துவதில் சில குறைபாடுகள் இருக்கிறது. அதாவது, இந்த சிம் பயன்படுத்தும் போது போன் ரிப்பேர் ஆகி விட்டால் சிம் கார்டை வேறு போனுக்கு மாற்ற முடியாது. அதுமட்டுமின்றி பெரும்பாலான செல்போன்களில் தற்போது eSIM பயன்படுத்தும் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.12.2024)! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு
டிங்கா டிங்கா வைரஸ் 2024: நோய் தாக்கியதில் நடனமாடும் பெண் – வீடியோ வைரல்!!
தியேட்டரில் பாதியில் கிளம்பினால் Refund?.., குஷியில் சினிமா பிரியர்கள்!!
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரஷீத் கான்? .., அப்ப ஹர்திக் பாண்டியா? .., அம்பானி போட்ட மாஸ்டர் பிளான்?