பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன் திட்டத்தின் மூலம் ரூ. 82,000 உதவித்தொகை பெற்று கொள்ளலாம்.
உதவித்தொகை:
உலகில் மாணவ மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசு கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ஏழை எளிய மாணவர்களின் மேற்படிப்பிற்காக பிரதமர் உயர் கல்வி ஊக்கத் தொகை(பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்) என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 82,000 வரை ஊக்கத்தொகை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்: மாணவர்கள் ரூ. 82,000 உதவித்தொகை பெறுவது எப்படி?
விண்ணப்பிக்க தகுதி:
- மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் மாணவ/ மாணவியர்களுக்கு வயது 18 முதல் 25 வரை இருக்க வேண்டும்.
- மேலும் 10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகளில் 80 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- வருமான வரிச் சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலும் 12ஆம் வகுப்பு முடித்து இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த(3+2 ஆண்டுகள்) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள்.
- மத்திய மற்றும் மாநில அரசின் வேறெந்த கல்வி உதவித்தொகை பெறுபவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
- கல்லூரியில் இடை நிற்கும் மாணவர்கள் அல்லது கல்வி நிறுவனத்தால் நீக்கம் செய்யப்படும் மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை நிறுத்தப்படும்.
போஸ்ட் ஆபிஸ் RD திட்டம்: ரூ 15000 முதலீடு செய்தால் ரூ 10 லட்சம் கிடைக்கும்!
விண்ணப்பிப்பது எப்படி?
- மாணவர்கள் இந்த உதவி தொகைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- மேலும் மாணவர்களின் சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவை மத்திய அரசின் டிஜிலாக்கர் மூலமாக சரிபார்க்கப்படும்.
- தேசிய உதவித்தொகை வெப் சைட்டில் (www.scholarships.gov.in) விண்ணப்பிக்கும் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
கடன் இல்லாமல் சொந்த வீடு கட்டணுமா? அப்ப உடனே இந்த ஐடியாவை Follow பண்ணுங்க!
பீமா சகி யோஜனா திட்டம்: பெண்களுக்கு மாதம் ரூ. 7000 உதவித்தொகை – மத்திய அரசின் அசத்தல் Scheme!
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்: பெண்களுக்கு வட்டி மட்டும் ரூ.60,000!