Home » செய்திகள் » 5 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!

5 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!

5 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!

பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் வரை கட்டாய தேர்ச்சி ரத்து   செய்யப்பட இருப்பதாக மத்திய அரசு ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளது.

RTE Amendment 2024 Compulsory pass for class 5 and 8th cancelled:

தமிழகத்தில் இருக்கும் மாணவர்களுக்காக தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் மாணவர்களுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரை ஷாக்கிங் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது பள்ளிகளில் தற்போது வரை நடைமுறையில் இருக்கும் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை இப்பொழுது மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு பின் மறு தேர்வு நடத்தப்படும். ஆனால் அந்த மறு தேர்விலும் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வரை மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது என்று தெரிவித்துள்ளது. இப்பொழுது வரை 8-ம் வகுப்பு வரை படிக்கும் எந்த மாணவரையும் பெயில் என அறிவித்து படித்த வகுப்பிலேயே மீண்டும் படிக்க வைக்கும் முறை இல்லை.

ஆனால் தற்போது கொண்டு வந்துள்ள புதிய விதியின் படி, மறு தேர்விலும் தேர்ச்சி அடையாவிட்டால் அதே வகுப்பிலேயே மீண்டும் படிக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்றைய குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஸ் நாரா உலக சாதனை – என்னவென்று தெரியுமா?

அரசு ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்.., போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு!!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.12.2024)! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

டிங்கா டிங்கா வைரஸ் 2024: நோய் தாக்கியதில் நடனமாடும் பெண் – வீடியோ வைரல்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top