கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சூர்யாவின் 44வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
JOIN WHATSAPP TO GET CINEMA NEWS
சூர்யா 44 திரைப்படம்:
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . மேலும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அத்துடன் இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது. மேலும் சூர்யா இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
படக்குழு:
இதையடுத்து சூர்யா 44 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்திய சினிமா செய்திகள்:
விடாமுயற்சி படத்தின் புக்கிங் தொடங்கியது.., எங்கு தெரியுமா?.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
விரைவில் சூரிய வம்சம் பார்ட் 2.., சரத்குமார் சொன்ன குட் நியூஸ்.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!
விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த Mistake .. இவரே இப்படி தவறு செய்யலாமா?
விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம்.., யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!
டைவர்ஸ் வாங்கிய பிரபல சீரியல் நட்சத்திர ஜோடி.., அதிர்ச்சியில் சின்னத்திரை!!