Home » செய்திகள் » 2025 ஜனவரி முதல் வாட்ஸ்அப் செயல்படாது.., மெட்டா நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!

2025 ஜனவரி முதல் வாட்ஸ்அப் செயல்படாது.., மெட்டா நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!

2025 ஜனவரி முதல் வாட்ஸ்அப் செயல்படாது.., மெட்டா நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!

அடுத்த ஆண்டு 2025 ஜனவரி முதல் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயலி செயல்படாது என்று மெட்டா நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp App:

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் சிறு குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை செல்போனில் மூழ்கி இருக்கின்றனர். மேலும் அந்த போனில் அதிகம் வாட்ஸ்அப் செயலியை தான் பயன்படுத்தி வருகின்றனர். மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இந்த வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்டர்நெட் மூலம் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, வீடியோ, ஆடியோ உள்ளிட்டவைகளை மற்றவர்களுக்கு அனுப்பி கொள்ளலாம். கால் பேசுவது முதல் பணப்பரிமாற்றம் வரை, யூசர்களை கவரும் விதமாக பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்சப் பயனர்களுக்கு தற்போது ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, பழைய ஆண்ட்ராய்டு ஓஎஸ் உள்ள செல்போன்களில் வருகிற 2025 ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து வாட்ஸ்அப் செயல்படாது என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. எதற்காக இந்த திடீர் முடிவு என்றால், கிட்கேட் ஓஎஸ் மற்றும் பழைய வெர்ஷன்கள் இருக்கும் செல்போன்களில் தற்போது கொண்டு வரும் வசதிகள் சரியாக செயல்படுத்த இயலாது என்பதால் தான் வாட்ஸ்அப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை கேட்ட பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மொபைல் போன்:

சாம்சங் Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini மற்றும் மோடரோலா Moto G 1st Gen, ஹச்டிசி, எல்.ஜி., சோனி செல்போன்களில் உள்ள சில மாடல்களிலும் வாட்ஸ்அப் செயல்படாது என்று கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

5 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!

தமிழகத்தில் 2025ல் eSIM சேவை அறிமுகம்  – BSNL நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஸ் நாரா உலக சாதனை – என்னவென்று தெரியுமா?

அரசு ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்.., போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு!!

தியேட்டரில் பாதியில் கிளம்பினால் Refund?.., குஷியில் சினிமா பிரியர்கள்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top