Home » செய்திகள் » TVK விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.., தீவிரமாக செயல்படும் தவெகவினர்!!

TVK விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.., தீவிரமாக செயல்படும் தவெகவினர்!!

TVK விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.., தீவிரமாக செயல்படும் தவெகவினர்!!

தமிழக வெற்றிக் கழகம் TVK விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக நடிகர் தாடி பாலாஜி பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

தவெக விஜய்:

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின்  முதல் மாநில மாநாட்டை நடத்தி, அந்த மேடையில் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்ததோடு மட்டுமின்றி கொள்கை எதிரி, அரசியல் எதிரி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவரின் பேச்சை கேட்டு அரசியல் பிரபலங்கள் பலரும் ஆடி போயுள்ளனர். அதன்பிறகு,  களத்திற்கு வெளியே வராத விஜய், சமீபத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது விசிக தலைவர் திருமாவளவன் பற்றி பேசியது வைரலானது. இதனை தொடர்ந்து விஜய் எப்போது மக்களை தேடி சுற்றுலா பயணம் மேற்கொள்வார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றி கழக நிர்வாகியுமான தாடி பாலாஜி விஜய் மக்களை தேடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் தேதி குறித்து பேசியுள்ளார்.

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தாடி பாலாஜி, ”  விஜய் ஜனவரி 27 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பார். இதுவரை தலைவர்கள் சென்ற சுற்றுப் பயணத்தை விட, விஜய் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் வேற லெவலில் இருக்கும். ஒரு ஃபயராக இருக்கும். மேலும் அந்த சுற்றுப்பயணத்தில் எனக்கு ஏதும் பொறுப்பு கொடுத்தால், அதை சிறப்பாக செய்வேன் என்று கூறியுள்ளார். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் நாளை (27.12.2024) முழு நேர மின்தடை பகுதிகள் – TNEB அறிவித்த ஏரியாக்களின் லிஸ்ட் இதோ !

சபரிமலையில் டிசம்பர் 26ல் மண்டல பூஜை.., பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்!!

கஜகஸ்தானில் விமானம் வெடித்துச் சிதறியது.., 72 பேரின் நிலை என்ன?

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top