உங்களுடைய வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா அப்ப இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம் என்று சாஸ்திரம் சொல்கிறது.
பொதுவாக நாம் சம்பாதிக்கும் எல்லா பணமும் வீண் செலவாகிறது. கையில் நிக்க மாட்டிக்கிறது, அதுக்கு என்ன காரணம் என்றும் தெரியாமல் தவிக்கிறீர்களா? அதற்கு வீட்டில் நாம் தெரியாமல் செய்யும் சில விஷயங்களே காரணம். அந்த விஷயங்களை சரி செய்தால் போதும் உங்கள் வீட்டில் பணம் தாண்டவம் ஆட ஆரம்பித்து விடும். எனவே அப்படி என்னென்ன விஷயங்கள் செய்ய கூடாது என்பது குறித்து கீழே பார்க்கலாம் வாங்க.
வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா? இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம்!
- உங்களுடைய வீட்டில் இருக்கும் பூஜை அறையில் உள்ள பூஜை பொருட்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி பூஜை பொருட்களை சுத்தமாக பராமரித்தல் கை நிறைய பணவரவு கிடைக்கும். எனவே பூஜை அறையையோ, பூஜை பொருட்களையோ சுத்தமாக வைக்க விடில் அந்த வீட்டில் பண கஷ்டம் உண்டாகும்.
- வீட்டை மாலை 6 மணிக்கு மேல் சுத்தம் செய்ய கூடாது. அப்படி செய்தால் துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- உணவு அருந்திய பின்னர் சாப்பிட்ட பாத்திரங்களை உடனே கழுவ வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் வாஸ்து ரீதியாக பணக் கஷ்டத்தை ஏற்படுத்தும்.
- அழுக்குத் துணியை தினசரி துவைக்க வேண்டும். பெண்கள் தங்களது தலை முடியை சீவிய பிறகு வீட்டிலே முடியை அப்படியே தரையில் போட்டு விடக்கூடாது. இதனால் வீட்டில் சண்டை, பிரச்சனை சச்சரவு, மனஸ்தாபம் போன்றவைகள் ஏற்படும்.
- துளசி செடி வீட்டில் வைத்து வழிபடுவது நல்லது. ஆனால் அந்த துளசி வாடி போவதோ அல்லது கருகிப் போவதோ வீட்டுக்கு நல்லது இல்லை.
2025 ஜனவரியில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது.., உங்க ராசி இருக்கான்னு பார்த்துக்கோங்க!!
தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: சிறப்புகளும் அன்னையின் வரலாறும்!
கந்த சஷ்டி விரதம் 2024: முருகனுக்கு வீட்டில் இருந்து விரதம் இருப்பது எப்படி?
பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) – என்ன காரணம் தெரியுமா?