இந்தோர் மாவட்டத்தில் பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் உலகம் எந்த அளவுக்கு முன்னேறி போய் கொண்டிருந்தாலும் சில விஷயங்கள் இன்னும் மாறாமல் தான் இருந்து வருகிறது. அதில் ஒன்று தான் பிச்சைக்காரர்கள். அதன்படி மக்கள் அதிகமாக கூட்டம் சேரும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வறுமை கோடு கீழ் இருப்பவர்கள் தங்களது வயிற்று பசிக்காக சிலர் யாசகம்(பிச்சை) பெறுவதை காண முடிகிறது.
பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!
அதிலும் சிலர், குழந்தைகளை கொடுமைப்படுத்தி ரோட்டில் பிச்சை எடுக்க வைக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தோர் மாவட்டத்தில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த மாதம் இந்தோர் மாவட்டத்தில் பிச்சை எடுப்பதும் பிச்சை போடுவதும் தடை செய்யப்படுவதாக புதிய கட்டுப்பாடு ஒன்றை மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். மேலும் இந்த கட்டுப்பாடு 2025 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
56 லட்சத்திற்கு வாங்கப்பட்ட இந்திய 100 ரூபாய் நோட்டு.., என்ன காரணம் தெரியுமா?
எனவே, பிச்சை கேட்பவரோ அல்லது கொடுப்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 1 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து முக்கியமான உபதே ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பிச்சை கேட்பவர் அல்லது பிச்சை போடுபவர்களை கண்டால் எங்களுக்கு தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1000 சன்மானம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு.., பொங்கலுக்கு 6 நாட்கள் லீவு.., குஷியில் மக்கள்!!
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி! இந்தியாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்!
பெங்களூரில் முதல் HMPV வைரஸ் தொற்று உறுதி.., கலக்கத்தில் மக்கள்!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!!