இந்த ஆண்டு மகர சங்கராந்தி 2025 சுப முகூர்த்தம் எப்போது என்பது குறித்தும் என்ன தானம் செய்தால் பலன் கிடைக்கும் என்பது குறித்தும் விரிவாக கொடுக்கப்பட்டது.
இந்துக்கள் பண்டிகைகளில் ஒன்று தான் மகர சங்கராந்தி. இந்த பண்டிகை தனுஷ் ராசியில் இருந்து கிரகங்களின் அரசன் வெளியேறி மகர ராசியில் நுழைவதை தான் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம் தேதி அல்லது 15ம் தேதி அன்று கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 2025 ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக இந்த பண்டிகை நாளில் நீராடுதல் மற்றும் தானம் செய்வது முக்கியம் என்று சாஸ்திரம் சொல்கிறது.
அதன்படி நாம் செய்யும் தானம் அன்று மங்களகரமான மற்றும் ஆசீர்வாதங்களை தரும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த நாளில் புஷ்ய நட்சத்திரம் தான் நாள் முழுவதும் இருக்கும். அதுமட்டுமின்றி சில சுப யோகங்களும் இந்த நாள் முழுவதும் இருக்கும். மேலும் இதற்கு இரண்டு சுப முகூர்த்தங்கள் உள்ளன.
மகர சங்கராந்தி 2025 சுப முகூர்த்தம் எப்போது?.., என்ன தானம் செய்தால் பலன் கிடைக்கும்?
அதன்படி காலை 9.03 முதல் மாலை 5.46 வரையும், அதே போல் சிறந்த முகூர்த்தம் காலை 9.03 முதல் காலை 10.48 மணி வரை, அதாவது ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் வரை எந்த காரியம் செய்தாலும் பல மடங்கு பலன் தரும். அதனால் தான் இந்த பண்டிகையின் முக்கியத்துவம் அதிகரிக்கும். குறிப்பாக தானம் செய்வதன் மூலம் இழந்த சொத்து, சந்தோசம், குடும்பம் என அனைத்தையும் மீட்டெடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது. எனவே அப்படி என்னனென்ன தானம் செய்தல் நல்லது நடக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா? இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம்!
தானம்:
- கருப்பு உளுந்து தானம்
- வெல்லம் தானம்
- கருப்பு எள் தானம்
- ஆடைகள் நன்கொடை தானம்
- நெய் தானம்
ஆன்மிக செய்திகள் உடனுக்குடன் இதோ!
தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: சிறப்புகளும் அன்னையின் வரலாறும்!
கந்த சஷ்டி விரதம் 2024: முருகனுக்கு வீட்டில் இருந்து விரதம் இருப்பது எப்படி?
பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) – என்ன காரணம் தெரியுமா?