Home » சினிமா » கேம் சேஞ்சர்(GAME CHANGER REVIEW) படம் எப்படி இருக்கு?.., கம்பேக் கொடுத்தாரா ஷங்கர்.., ரசிகர்களின் விமர்சனம் இதோ!!

கேம் சேஞ்சர்(GAME CHANGER REVIEW) படம் எப்படி இருக்கு?.., கம்பேக் கொடுத்தாரா ஷங்கர்.., ரசிகர்களின் விமர்சனம் இதோ!!

கேம் சேஞ்சர்(GAME CHANGER) படம் எப்படி இருக்கு?.., கம்பேக் கொடுத்தாரா ஷங்கர்.., ரசிகர்களின் விமர்சனம் இதோ!!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர்(GAME CHANGER) படம் எப்படி இருக்கு என்பது குறித்து ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இப்படத்தை தமிழில் வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு தான் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

மேலும் இப்படத்தில் அவருடன் சேர்ந்து கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் எதிர்பார்த்த மாதிரி இன்று உலகமெங்கும் வெளியாகி உள்ளது. எனவே இப்படத்தின் முதல் ஷோவை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அவைகள் பின்வருமாறு,

ரசிகர்கள் விமர்சனம்:

இந்தியன் 2வில் தோல்வியை தழுவிய ஷங்கர் இப்படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ளார். மேலும் ராம் சரண், அஞ்சலி மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு அருமையாக இருந்தது. இதுவரை இல்லாத அரசியல் குறித்து ஷங்கர் பேசிய விதம் அற்புதமாக இருந்தது என்று  குறிப்பிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி மேலும், இப்படத்தில் இடம்பெற்ற கதை காலங்கடந்த பழைய கதைக்களம் என்றும் கூறி வருகின்றனர். தேவையில்லாத இடத்தில் பாடல்கள் வருவது திரைக்கதையை முற்றிலும் கெடுக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா?… எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு தெரியுமா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!

சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS..,  வெளியேறும் போட்டியாளர்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top