நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது – தவெக தலைவர் விஜய் அறிக்கை!
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் எந்தப் பொய்யையும் சொல்லி,
தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நீட் தேர்வு ரத்து:
கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள்.
தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் என்று திமுகவை எதிர்த்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
வெக தலைவர் விஜய் அறிக்கை:
அந்த வகையில் நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது என்றும். அத்துடன் எந்தப் பொய்யையும் சொல்லி,
தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை.” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். tvk vijay criticize dmk cheated tn people neet cancellation issue
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி?.., புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!!
மேலும் இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது, எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே….
என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.