Home » செய்திகள் » கர்நாடகா ATMல் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு.., பணப்பெட்டியை  திருடிச் சென்ற கொள்ளையர்கள்!!

கர்நாடகா ATMல் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு.., பணப்பெட்டியை  திருடிச் சென்ற கொள்ளையர்கள்!!

கர்நாடகா ATMல் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு.., பணப்பெட்டியை  திருடிச் சென்ற கொள்ளையர்கள்!!

இன்று கர்நாடகா ATMல் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பணப்பெட்டியை கொள்ளையர்கள் திருடிச் சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதற்கு அரசு கடுமையான தண்டனையை கொண்டு வந்த போதிலும், இது மாதிரியான குற்றங்கள் குறைந்த பாடில்லை. அதுமட்டுமின்றி டிஜிட்டல் மூலமாக பணம் திருட்டு போகும் நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலம் பிதர் நகரில் ஒரு கோர சம்பவம் அரங்கேறி உள்ளது.

அதாவது, ” கர்நாடக மாநிலம் பிதர் நகரில் இருக்கும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் மிஷினில் பணம் நிரப்ப வங்கி ஊழியர்கள் கம்பெனி வேனில் வந்துள்ளனர். அந்த ஊழியர்கள் கையில் துப்பாக்கி ஏந்திய படி அவர்கள் பணம் நிரப்புவதற்காக வேனில் இருந்து பணப்பெட்டியை இறக்கி உள்ளனர். அந்த சமயம் பார்த்து அந்த இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்ட போது ஒரு ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். அதன் பின்னர், அங்கிருந்து பணப்பெட்டியை கொள்ளையடித்து கொள்ளைக்காரர்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கொள்ளையர்கள் பணப்பெட்டியை பைக்கில் வைத்து தூக்கிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025- பரிசுப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?

இந்தி நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.., வீட்டுக்குள் புகுந்து அட்டாக் செய்த நபர்!!

இஸ்ரோவின் “ஸ்பேடெக்ஸ்” திட்டம் வெற்றி- 4வது இடத்தை பிடித்த இந்தியா!!

“Helmet” அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை.., அரசின் புதிய உத்தரவு!!

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 2025! சென்னை ஐஐடி அறிவிப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top