இந்தி நடிகர் சைஃப் அலிகானை குத்திய நபர் கைது செய்து மும்பை போலீஸ் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சைஃப் அலிகான். இவர் பிரபல நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மும்பையில் இருக்கும் பந்த்ராவின் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இப்படி இருக்கையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சைஃப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த திருடன் ஒருவன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போலீஸ் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் நுழைந்த அவர், வீட்டு ஊழியர்களை மிரட்டி ரூ.1 கோடி கேட்டிருக்கிறார், அப்போது அவரை தடுக்க முயன்ற போது தான் இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சைஃப் அலிகானை குத்திய நபர் கைது.., 24 மணி நேரத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்?
அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது?.., வெளியான முக்கிய தகவல்!!!
இந்நிலையில், அந்த குற்றவாளியை பிடிக்க மும்பை போலீசார் உடனடியாக 20 குழுக்களை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தது. அதன்படி கத்தியால் குத்திய அந்த நபரை அடுத்த 24 மணி நேரத்தில் காவல்துறை ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி ஏன் சைஃப் அலிகானை கத்தியால் குத்தினார் என்றும், திருட வந்தாரா இல்லை கொலை செய்ய வந்தாரா என்று போலீஸ் அதிரடியாக விசாரணை செய்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்.., வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!
பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!
சினிமாவுக்கு பிரேக் எடுக்கும் அஜித்குமார்?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
அஜித்தின் விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட்.., சுட சுட வெளியான குட் நியூஸ்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!