Home » செய்திகள் » மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம்.., எந்த ஏரியாவில் தெரியுமா?

மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம்.., எந்த ஏரியாவில் தெரியுமா?

மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம்.., எந்த ஏரியாவில் தெரியுமா?

தூங்காநகரம் என்று பெயரெடுத்த மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் வர இருப்பதாக சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மிகவும் முக்கியமான நகரம் என்றால் அது ‘மதுரை” தான். மதுரை என்று சொன்னாலே அங்கு வாழும் மக்களுக்கு தனி கெத்து தான். ஏனென்றால் கடவுளுக்கே கல்யாணம் பண்ணி பார்த்த ஊரு தான் மதுரை. அதுமட்டுமின்றி, அங்கு வாழும் மக்கள் மிகவும் பாசக்காரர்கள் என்று பெயர் எடுத்தவர்கள். மேலும் தூங்கா நகரம் என்று பெயரெடுத்த மதுரை சாப்பாட்டுக்கு பெயர் போன ஊர் என்று சொல்லலாம்.

அது போக இங்கு சுற்றி பார்ப்பதற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன. மேலும் பரபரப்பான மதுரையில்  பேருந்தில் இருந்து விமான சேவை வரை அனைத்தும் சீரான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரைக்கு புதிதாக ”மெட்ரோ ரயில்” சேவை வரப் போவதாக கூறப்படுகிறது. அதாவது, தற்போது சென்னையில் மெட்ரோ 2ம் கட்ட பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன் இரண்டாம் நிலை மற்ற நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்பட இருக்கிறது. இதில், மதுரை மாநகரமும் ஒன்று. அதன்படி, மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க இடங்களை தேர்வு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதுவும், மதுரையில் இருக்கும் 3 இடங்களில் சுரங்க நிலையங்கள் அமைக்க உள்ளதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் நாளை (18.01.2025) மின்தடை பகுதிகள்! அனைத்து மாவட்டங்களின் பவர் கட் விவரம்!

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025- பரிசுப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?

இந்தி நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.., வீட்டுக்குள் புகுந்து அட்டாக் செய்த நபர்!!

இஸ்ரோவின் “ஸ்பேடெக்ஸ்” திட்டம் வெற்றி- 4வது இடத்தை பிடித்த இந்தியா!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top