நடிகர் தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் செல்கிறார் என்றும் அதற்கு காவல்துறை அனுமதி வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி ஒரு வருடம் நிறைவடைய இருக்கிறது. அதை கொண்டாட தொண்டர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் விஜய் WORK FROM HOME அரசியல்வாதியாக இருக்கிறார் என்று தொடர்ந்து விமர்சனம் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதை உடைக்கும் விதமாக தவெக தலைவர் விஜய் களத்தில் இறங்கி போராட இருக்கிறார்.
தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் செல்கிறார்.., அனுமதி வழங்கிய காவல்துறை!!
அதாவது தவெக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க போவதாகவும் அதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிட்டத்தட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறை?.., பிலயேர்களுக்கு செக் வைத்த BCCI!!
தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் எதிர்த்து அப்பகுதியில் வாழும் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, விமான நிலைய எதிர்ப்புக் குழு என்ற ஒரு குழு அமைத்து, இரவு பகல் பாராமல் கிராம மக்கள் ஒன்று கூடி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். தற்போது அவர்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறார் விஜய். இந்நிலையில் பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு வருகிற ஜனவரி 20ம் தேதி (திங்கட்கிழமை) காவல்துறை அனுமதி வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
கார் ரேஸில் முதல் பரிசை வென்ற அஜித் மகன் ஆத்விக்.., புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
மதுரையில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம்.., எந்த ஏரியாவில் தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை (18.01.2025) மின்தடை பகுதிகள்! அனைத்து மாவட்டங்களின் பவர் கட் விவரம்!
கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறை?.., பிலயேர்களுக்கு செக் வைத்த BCCI!!