விஜய் டிவியில் பேமஸ் ஷோவான பிக் பாஸ் சீசன் 9ல் தொகுப்பாளர் குறித்து சோசியல் மீடியா முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் மிகவும் பிரபலமான ஷோ தான் பிக் பாஸ். ஹிந்தியில் தொடங்கிய இந்த ஷோ தற்போது தமிழ் மக்களையும் கவர்ந்து வருகிறது. அதன்படி தமிழில் பிக்பாஸ் என்று எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு முதலில் வருவது உலக நாயகன் கமல்ஹாசன் தான். கடந்த ஏழு சீசன்களை கமல் தான் தொகுத்து வழங்கினார். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று அவர் கூறியது பிக்பாஸ் ஷோவுக்கு பொருத்தமாக இருந்தது.
பிக் பாஸ் சீசன் 9ல் தொகுப்பாளர் மாற்றமா? விஜய் டிவி நிர்வாகம் கொடுத்த ஷாக்கிங் தகவல்!!
அவருக்காகவே இந்த ஷோவை பார்க்க கூட்டம் அலைமோதியது. ஆனால் பிக்பாஸ் சீசன் 8ல் இருந்து, விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். அவர் பிறகுக்கு இந்த ஷோவை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தார். மேலும் விஜய் சேதுபதி அவர் பாணியில் தொகுத்து வழங்கினார். அதனாலேயே, சிலர் விமர்சனங்களை முன் வைத்து வந்தனர். குறிப்பாக, சில போட்டியாளர்களுக்கு ஆதரவாக பேசுகிறார், சில போட்டியாளர்களை பேசவே விடுவதில்லை என பலரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதனை தொடர்ந்து, பிக்பாஸ் 8ம் சீசன் நேற்றோடு நிறைவு பெற்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் தான்? போட்டோவுடன் வெளியான ஆதாரம்!!!
அதன்படி, இந்த சீசன் பைனலில் 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில் டைட்டிலை முத்துக்குமரன் அடித்து சென்றார். அவருக்கு கோப்பையுடன் சேர்த்து 40,50,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அவரை தொடர்ந்து சௌந்தர்யா இரண்டாம் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் அடுத்த சீசன் தொகுப்பாளர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏழு சீசனிலும் இல்லாத அளவுக்கு 8வது சீசனில் அதிகம் பார்வைகள் மற்றும் வாக்குகள் கிடைத்து இருக்கிறது. எனவே விஜய் சேதுபதி தான் அடுத்த சீசனை தொகுத்து வழங்குவார் என்று விஜய் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லின்ச் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வீடியோ வெளியீடு .., ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!!
அஜித்தின் அடுத்த கார் ரேஸ் எப்போது?.., வெளியான முக்கிய தகவல்!!!
பிக்பாஸ் 8ல் இருந்து எலிமிட்டான ஜாக்குலின்.., வெயிட்டான சம்பளத்தை கொடுத்த BIGGBOSS!!!
பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!